வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் இன்று(வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால், பிரதான வீதிப் போக்குவரத்து தடைப்படதன் காரணமாக மாணவர்களின் வருகை குறைவாக கணப்படுகிறது.

மழை நீர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதியில் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்று வந்த நிலையில், சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காணமாக அவர்கள் குறித்த நேரத்துக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

குறித்த காரணங்களின் அடிப்படையில், கிழக்குப் பலக்லைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது“ என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்