சற்றுமுன் வெளியான விசேட வர்த்தமானி

இலங்கை பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 43 வது பந்திக்கு அமைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமான விசேட வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை பொலிஸ் திணைக்களம் இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்