சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் மனிதர்களே! – யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட்

சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் மனிதர்களே! அவர்களும் மனிதர்கள் என நினைந்து மனிதநேயப் பண்புடன் மக்கள் செயலாற்றவேண்டும்.

– இவ்வாறு தெரிவித்தார் யாழ்.மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட். சுத்திகரிப்பு தொடர்பாக மக்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

மக்கள் தமது இஷ்ப்படி கிறிக்கெட் பந்து வீசுவது போன்று தமது வீட்டுக் கழிவுகளை தெருவில் சைக்கிளில் சென்றோ அல்லது மோட்டார் சைக்கிளில் சென்றோ வீசிவிட்டுச் செல்கின்றார்கள். அதற்கென வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் இடுவது கிடையாது.

சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மனிதர்களே. அவர்களை மனிதநேயத்துடன் நாங்கள் பார்க்கவேண்டும். அவர்களையும் சக மனிதர்களாகப் போற்றவேண்டும்.

நாம் சகல இடங்களுக்கும் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தி, குற்றமிழைப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த முடியும். ஆனால், நாம் அவ்வாறு செயற்படவில்லை.

இனிவரும் காலங்களில் நாம் குப்பைத் தொட்டிகளைக் குறைத்து வட்டார ரீதியாகக் கழிவகற்றுகின்ற ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க உள்ளோம். மக்களின் ஒத்துழைப்பு எமக்கு மிக முக்கியம் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்