உலகப்போர் நினைவுகூரல் நிகழ்வில் பிரித்தானிய படைவீரனின் சிலை திருட்டு!

பிரித்தானியாவில் முதலாம் உலகப் போர் தொடர்பான நினைவுகூரல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பிரித்தானிய லெஜியன் படைவீரர் ஒருவரின் சிலை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்றும், கறுப்பு நிறமான குறித்த சிலை அபேர்கார்ன், கெயார்பில்லி பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குவென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு பற்றிய தகவல்களுக்கு பாதுகாப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உலகப் போரின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகள் உணர்வுகளுடன் தொடர்புபட்டவை.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. உலகப் போரின் நினைவாக பிரித்தானியாவின் றோயல் பிரிட்டிஷ் லெஜியன் படை வீரரின் குறித்த சிலை பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனம் ஒன்று “உலகப் போரின் பின்னர் எமது சந்ததியை பாதுகாத்த, அர்ப்பணித்த, மீட்டெடுத்த மற்றும் மாற்றியமைத்த சந்ததிக்கு நன்றி” என்ற தலைப்பில் ஊர்வலத்தை நடத்தியிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்