இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் மீது ஐ.சி.சி குற்றச்சாட்டு!

ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தை அவர் மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் விளையாட்டுக்களில் பங்குபற்றுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர எதிர்வரும் 14 நாட்களில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கான விளக்கமளிப்புக்களை அவர் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்