ரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ரொரன்ரோ நகரின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிழந்துள்ளார்.

ரொரன்ரோவின் அல்பானிய பிரதேசத்தில் துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த அல்பானியப் பிரதேசப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்