புயல்காற்றின் எதிரொலி: அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது

கனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் வீசிவரும் கடுமையான புயல்காற்று காரணமாக, குறித்த பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருளில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பிராந்தியத்தில் கடும் குளிரான காலநிலை நீடித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, கனடாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் 13 ஆயிரத்து 881 பயனாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சில பகுதிகளுக்கான மின் இணைப்புகள் நேற்று இரவு சரிசெய்யப்பட்ட அதேவேளை, பல இடங்களுக்கான மின் இணைப்பு தொடர்ந்து இன்றும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புயல் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சில பிராந்தியங்களின் வெப்பநிலையானது -22 டிக்ரி செல்சியசாக குறையும் நிலை காணப்படுவதாகவும் சுற்றுச்சூழல் கனடா அமைப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்