ஒட்டுமொத்த பிரித்தானியா நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசின் அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்திருந்தார்.

இந்த அறிக்கை சுமார் 500 பக்கங்களை கொண்டிருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரித்தானியா நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்