பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (புதன்கிழமை) ரொறன்ரோ ட்ரான்ஸிட் கமிஷன் ஹில்ஸ்ட்ஸ்ட் அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே மதியம் 3 மணிக்கு இடம்பெற்றது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 45 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்பியூலன்சில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதில் பயணித்த மேலும் 24 பேர் சிறு காயங்களுடன் மாற்று பேருந்து ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் மிகுதி பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் வேறு பேருந்தில் பயணத்தை தொடர்ந்தாகவும் பொலிஸார் கூறினார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும், போக்குவரத்து சமிக்ஞ்ஞை விளக்குகள் ஒளிரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்