இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்தது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கட் இழப்பின்றி ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் இருந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 336 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணிக்காக ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

முன்னதாக இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 260 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

இதற்கமைய, இலங்கை அணியைவிட 46 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்