கனேடிய மக்களுக்கு முக்கய அறிவிப்பு!

கனடாவின் இந்த பருவகாலத்திற்கான முதலாவது பலத்த பனிப்பொழிவு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ரொறன்ரோவைத் தொட்டுச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் தினங்களில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சாரதிகள் விழிப்புடனேயே வாகனங்களைச் செலுத்திச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், சாரதிகள் வழக்கத்தினை விடவும் அதிக தூர இடைவெளி விட்டே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர மக்கள் வெளியில் செல்லும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்