சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவு!

சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 72 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்டத் தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் டிசம்பர் 11 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 72 தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

கடைசி நாளான நேற்று பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் மற்றும் அஜித் ஜோகி கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்