சத்தீஷ்கரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள 72 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அந்தவகையில்  18 மாவட்டங்களிலுள்ள 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர்.

இதில் தாம்தரி, சரியாபாத் ஸ்பூர், பில்ராம்பூர், மக சம்ண்ட், தபிர்தம் ஆகிய மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றமையால், அப்பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டு, நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்