யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் பிரபாகரனின் பிறந்த நாள் அனுஷ்டிப்பு

மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை,  இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும் பலர் மிகவும் விமர்சையாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடி வருகின்றனர்.

அதனடிப்படையிலேயே நேற்று நள்ளிரவு, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி பிரபாகரனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்துள்ளனர்.

இதேவேளை பிறந்த நாளை முன்னிட்டு ‘பிரபாகரனின் சிந்தனை’ எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழகத்திற்குள்ளும் சில சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்