கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு

இன்றைய தினம் கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு அ.த.க.பாடசாலையில் 1001 மரங்கள் நடும் திட்டம் சிறப்பாக பாடசாலை வளாகத்தினுள் நடை பெற்றது இந்த நிகழ்வில் கரத்துறைபற்று கோட்டக்கல்வி அதிகாரி ஸ்ரீபுஷ்பகாந் மனித உரிமை செயற்பாட்டாளர் முபாத் சமூக ஆர்வலர்கள் பாடசாலை அதிபர் ஆசிரீயர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் எழுத்தாளர்கள் கிராம பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பாடசாலை வளாகத்தினுள் 26,27 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியை டொரோன்டோ புளூஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்