இலங்கை கிரிக்கட் அணி தேர்வு குழுவின் அதிரடி நடவடிக்கை

முழுமையான உடற்தகுதி பெறாத வீரர்கள் இனி தேசிய கிரிக்கட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணித் தேர்வாளர்கள் குழுவின் தலைவர் அசந்த டி மெல் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மத்தியில் உடற்தகுதி ஒரு நீண்டகால பிரச்சினையாக இருக்கிறது.

முழுமையான உடற்தகுதி இல்லாமல், அணியில் வீரர்களை இணைத்துக் கொள்வதால், நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்கிறது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் வீரர்கள் தங்களது முழுமையான உடற்தகுதியை நிரூபித்தப் பின்னரே அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தாங்கள் இறுக்கமாக கடைபிடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்