திருமணத்திற்கு சென்றவர்களை நெகிழவைத்த புதுமணத்தம்பதியினரின் செயல்!

கடலூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுமணத்தம்பதியினர் தங்களுடைய திருமணத்தில் நிதி சேர்த்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து கஜா புயலாக மாறியது.

இது நாகை, புதுக்கோட்டை வழியே கரையை கடந்தது. ஆனால் கரையை கடக்கும்போது டெல்டா மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

அதிலிருந்து மீளமுடியாமல் இன்றுவரை பொதுமக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் பலரும் வாகனங்களில் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில் தினேஷ்குமாா், திவ்யா தம்பதியினா், தங்களுடைய திருமணத்திற்கு வருபவர்களிடம் கஜா புயலுக்கு நிவாரண நிதி வாங்குவதாக முடிவு செய்துள்ளனர்.

அதன்படி தங்களுடைய நண்பர்களின் உதவியுடன் திருமணத்திற்கு வந்தவர்களிடம் நிதி வசூலித்துள்ளனர். புதுமணத்தம்பதியினரின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அவர்களை மனமார வாழ்த்தி சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்