மனிதனாக மாத்திரம் இருந்து மக்களுக்கு சேவையாற்றுவோம்: நிஷாந்த டி சில்வா

இனம் மற்றும் மதம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் மனச்சாட்சிக்கு உண்மையுள்ள மனிதனாக இருப்போமென குற்­றப்­பு­லனாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்­துள்ளார்.

நிஷாந்த டி சில்வாவின் பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரும் ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அக்கருத்துக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “எனது பரம்­ப­ரையை சேர்ந்த தாத்தா மற்றும் அப்பா ஆகியோர் இந்நாட்டில் வாழ்ந்து இம்மக்களுக்காக சேவையாற்றியமையை எண்ணியும் எனது தந்தை தழிழர் என்பதை எண்ணியும் பெரு­மையடைகின்றேன்.

அந்தவகையில் நான் எப்போதும் இனம் மற்றும் மதம் ஆகியவற்றுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும் மனிதனல்ல. அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் மாத்திரமே எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

மேலும் மன­ச்சாட்­சிக்கு உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்திட்டங்களுக்கு மதிப்பளித்தே எப்போதும் செயற்படுவேன். ஆனால், இதற்காக என்மீது கோபடைவார்களாயின் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என நிஷாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்