பிரபாகரன் ஆயுதத்தூடாக பெற்றதை சுமந்திரன் மதிநுட்பத்தால் பெறுகிறார்! ரோஹித அபேகுணவர்த்தன

விடுதலை புலிகள்  அமைப்பின்   தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன்  ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று  சுமந்திரன் தனது மதிநுட்பத்தின் ஊடாக ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி தமது  அதிகாரத்தை  தக்கவைத்துக் கொள்ள  நாட்டையே காட்டிக்  கொடுக்கின்றது  என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார் .

தமிழ்  தேசியகூட்டமைப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினர்  விஜயகலா  மகேஷ்வரனும்  எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு  தற்போது  வடக்கில்   உருவாகி   வருகின்றது.

தேசிய அரசாங்கம் கடந்த  மூன்று வருடகாலமாக  நாட்டை   பிரிக்கும் செயற்பாடுகளை  மாத்திரமே  முன்னெடுத்தது  எனவும்   தெரிவித்தார் .

பொதுஜன பெரமுனுவின்   கட்சி அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்