2018 சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பெலன் டோ எனப்படும் தங்க கால்பந்து விருது, ரியல்மெட்ரிட் மற்றும் கோஸ்டரிகா அணியின் மத்தியகள வீரரான லூகா மொட்ரிச் இற்கு கிடைத்துள்ளது.

33 வயதுடைய மொட்ரிச், ரஸ்யாவில் இடம்பெற்ற உலகக் கிண்ண காலபந்தாட்டத் தொடரில் கோஸ்டரிகா அணி, முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

1956 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பெலன் டோ எனப்படும் தங்க கால்பந்து விருதை கடந்த 2007 ஆம் ஆண்டு பிரேஸிலின் முன்னாள் வீரர் காகா வென்றிருந்தார்.

இதையடுத்து, கடந்த ஒரு தசாப்தகாலமாக ஆர்ஜென்டீணாவின் லியனல் மெஸ்ஸி மற்றும் போர்த்துக்களின் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவருமே தங்க கால்பந்து விருதை தலா 5 முறைகள் தொடர்ச்சியாக வென்றிருந்தனர்.

இந்த நிலையில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரை முந்திச் சென்று கோஸ்டரிகா வீரர் லூகா மொட்ரிச் இந்த தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்