இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் மஹிந்த

பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மஹிந்த அணியினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனுவை மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது என்றும், இதுபோன்ற தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை எனவும் மனுதாரர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்