வவுனியாவை உலுக்கிய சோகமான சம்பவம்..!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் ஒன்றினை போலிசார் மீட்டுள்ளனர்.

நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார்தேடியுள்ளார். இதன்போதே கிணற்றினில் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.

பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.பொலிசாரால் சடலம் மீட்கபட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்