எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐ.தே.கவினர் தயாராகவே உள்ளனர் – மஹிந்த யாப்பா அபேவர்தன

ஆட்சியினை மீண்டும் கைப்பற்றுவதற்காக எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐக்கிய தேசிய கட்சியினர் தயாராகவே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்குசென்று மண்டியிட்டு ஆதரவுகோருகின்றனர்.

எந்தவொரு காட்டிக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையே பொறுப்புகூறவேண்டும். ஆட்சிக்காக அனைத்துக் காட்டிக்கொடுப்புகளையும் அவரும் அவரது சகாக்களும் செய்துவருகின்றனர்.

உலக வரலாற்றிலேயே நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக, ஜனநாயகத்துக்கு எதிராக இலங்கையில் சபை அமர்வு நடத்தப்பட்டுவருகின்றது.

மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படுகின்றது. எனவே, ஸ்தீரமான அரசு அமைந்த பின்னர் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும். அதற்காக குழுவொன்று அமைக்கப்படும்.

சபாநாயகர் உட்பட இந்த ஜனநாயகவிரோத – நிலையயற்கட்டளைகளை அப்பட்டமாகமீறும் வகையிலான செயற்பட்ட அனைத்து அதிகாரிகளும் பொறுப்புகூறவேண்டிவரும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்