முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக கதிர்காமத்தம்பி செல்வப்பிரகாஷ் சத்தியப்பிரமானம்…

கதிர்காமத்தம்பி செல்வப்பிரகாஷ் முழுத்தீவுக்குமான அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் இன்று(06) செய்து கொண்டார்.

இவர் முகாமைத்துவ பட்டதாரியும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பரிசோதகரும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தரும் மறைந்த பிரபல அரசியல்வாதி டாக்டர்.கதிர்காமத்தம்பி அவர்களின் புதல்வரும் ஆவார்.

மேற்படி இவர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளரும், பிரபல சமூக சேவையாளருமாவார்.

இறுதியாக இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாம் நிலை பெற்றவரும் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்