சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்

சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது இராமலிங்கம் வீதி மற்றும் கென்ஸ்மன் வீதி ஆகிய இரண்டு வீதிகளின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இளைஞர் கழகத்தினால் பராமரிக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி நகர இளைஞர் கழக தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் விருந்தினராக கலந்து கொண்டு மரநடுகை நிகழ்வினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இம் மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் அ.பாலமயூரன், தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் பத்திரிகை ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி  முத்துக்குமாரசுவாமி அகிலன், கிராம சேவகர் சுபாஸ்சந்திரபோஸ், இளைஞர் சேவைகள் அதிகாரி அனுதரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர்  உட்பட இளைஞர் கழக உறுப்பினர்கள் எனப்பெருந்திரளானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்