கட்சிக்குத் தான் தலைவர் இல்லை! பிரதமர் தெரசா மே திட்டவட்டம்!

பிரித்தானியாவின் அடுத்த பொதுத் தேர்தலின் போது கன்சர்வேடிவ் கட்சிக்குத் தான் தலைமை தாங்கப் போவதில்லை என பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக பிரஸ்ஸல்சுக்கு சென்றுள்ள நிலையில் தனது கட்சி மற்றொரு தலைவருடன் தேர்தலுக்குச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றையதினம் மாலை கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடந்தப்பட்ட பிரதமர் தெரேசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இதை

அடுத்து 2022 இல் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தனது கட்சி வேறொரு தலைவருடன் களமிறங்கும் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதில் 200 பேரின் ஆதரவை பெற்றுள்ளார். இது மொத்த வாக்குகளில் சுமார் 63% ஆகும். 2016-ல் நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது எனினும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் ஒப்பந்தம் மீது நம்பிக்கை இல்லாததால் அவரது கட்சியின் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய கடிதம் காரணமாக பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

நேற்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியானதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் தமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களை கொண்டுவர தாம் போராடவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்