இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்!

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கட் அணிகளின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்வை நியமிக்க இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழு தீர்மானித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்ட தினேஸ் சந்திமால் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்ட திசர பெரேரா ஆகியோரை நீக்கி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளில் உபதலைவராக நிரோஷன் திக்வெல்ல செயப்படுகிறார்.

அதன்படி , நியுசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி விபரம் இதோ….

லிசி்த மாலிங்க (தலைவர்),
நிரோஷன் திக்வெல்ல (உபதலைவர்),
ஏஞ்சலோ மெத்திவ்ஸ்,
தனுஸ்க குணதிலக,
குசல் பெரேரா,
தினேஸ் சந்திமால்,
அசேல குணரத்ன,
குசல் மெந்திஸ்,
தனஞ்சய டி சில்வா,
திசர பெரேரா,
தசுன் சானக,
லக்சான் சந்தகென்,
சீக்குகே பிரசன்ன,
துஸ்மந்த சமீர,
கசுன் ராஜித்த,
நுவான் பிரதீப் ,
லஹிரு குமார.

அமைச்சரவைக்கு நீதிமன்றால் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் , இந்த அணிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்