காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சமர்

(லோகநாதன் கஜரூபன்)

2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிக சிறப்பாக இன்று(16) நடைபெற்றிருந்தது.

இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் திரு.விஷிகரன் தலைமையில் நடைபெற்றதுடன் , பிரதம விருந்தினராக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் திரு.கி.ஜெயசிறில் மற்றும் விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் திரு.மு.காண்டீபன் ,திரு.எஸ்.மோகன் , திரு.லயன்ஸ்.நேசராஜா, திரு.பூபாலபிள்ளை,திருமதி.ஜெயராணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் சுற்றுப்போட்டியில் பலம் வாய்ந்த 8 அணிகள் கலந்து கொண்டது .இவ் சுற்றுப்போட்டியை குதூகலப்படுத்துவதற்க்காக ஆளவந்தான்,சிங்கம்,மாரி,சர்கார்,மங்காத்தா ,சாமி,பில்லா,புலி எனும் பெயர்களில் அணிகள் களமிறங்கியிருந்தது.

விறு விறுப்பாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியிற்கு முரளி தலைமையிலான பில்லா அணியினரும் கபிலன் தலைமையிலான சிங்கம் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர். பலத்தப்போட்டிக்கு மத்தியில் பில்லா  அணியினர் வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுலக்சன் அவர்களும்,தொடர் ஆட்ட நாயகனாக பிரதீசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.முதல் மூன்று அணிகளை பெற்ற அணிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வாறான சுற்றுப்போட்டியை நடத்த மிக முக்கிய நபரான திரு.விஷிகரன் அவர்களுக்கு அனைத்து வீரர்களும் பாராட்டுகளை செய்திருந்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்