வெற்றிக்காக போராடிவரும் இந்திய அணி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவருகிறது.

இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5 விக்கட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னங்ஸில் சகல விக்கட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இந்திய அணி தமது முதலாவது இன்னங்ஸில் 283 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பதிலளித்தாடிவரும் இந்திய அணி, நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் 5 விக்கட்டுக்கள் கைவசமுள்ள நிலையில், 175 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்