இரவை அதட்டும் குழந்தையின் அழுகை வீதியோரம் கேட்கையிலே – கவிதைக் களம்

முலைப் பால்…..

இரவை அதட்டும் குழந்தையின் அழுகை வீதியோரம் கேட்கையிலே…

அள்ளி அணைத்து முத்தமிட்டு எடுத்தேன் பாவிகள் யாரோ என்று.

உடல் சுகத்தின் சுகம் உள்ளத்தை உசுப்பவில்லை போலும்.

அழுதபடி குழந்தை தோல் சுருங்கிய என் மார்பில் எமாற்றத்துடன் நானும்.

ஒரு வயதுக்குழந்தை பக்கத்து வீட்டில் கதவை தட்டினேன்.

ஆறு மாதத்துடன் பொட்டிப்பாலாம் மார்பழகு போய்விடுமாம்.

கதவை மூடினால் இருண்டது தாய்மை இருளோடு…

அழும் குழந்தையோடு தேடிக்கொண்டு நடக்கிறேன்.

பெற்றவள் முலைப்பால் எங்கே வீணாக சிந்துகிறாள் என்று.

முலைப்பால் வாடை வந்தால் சொல்லுங்கள் பாவம் குழந்தை பசியோடு.

காமத்தின் எச்சம் பூவல்லவே காலையில் மலர்ந்து மாலையில் உதிர………………………………………….

 

காரையன் (கதன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்