காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் கிரிக்கெட் சமர் ! சம்பியனானது பில்லா அணி..!

2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது கடந்த 16ம் திகதியன்று காரைதீவு கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் திரு.விஷிகரன் தலைமையில் நடைபெற்றது.

அணிக்கு 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  இந்த சுற்றுப்போட்டியில் ஒரு அணியில் 07பேர்  விளையாடியிருந்தனர்.

இந்த சுற்றுப்போட்டியில் காரைதீவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு – ஆளவந்தான் ,சிங்கம்,மாரி,சர்கார்,மங்காத்தா ,சாமி,பில்லா,புலி எனும் பெயர்களில் பலம் வாய்ந்த 8 அணியாக களமிறங்கியிருந்தனர்.

விறு விறுப்பாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு பகீரதன் தலைமையிலான பில்லா அணியினரும் கபிலன் தலைமையிலான சிங்கம் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

பலத்தப்போட்டிக்கு மத்தியில் பில்லா அணியினர் வெற்றி வாகை சூடி கொண்டனர் .இரண்டாம் இடத்தை சிங்கம் அணி பெற்றது.

இத்தொடரின் 3ம் இடத்தை சிந்துஜன் தலமையிலான புலி அணி பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுலக்சன் அவர்களும்,தொடர் ஆட்ட நாயகனாக பிரதீசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு அதிதிகளினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் திரு.கி.ஜெயசிறில்  விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் திரு.மு.காண்டீபன் ,திரு.எஸ்.மோகன் , திரு.சபாபதி நேசராஜா, திரு.பூபாலபிள்ளை,திருமதி.ஜெயராணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறான சுற்றுப்போட்டியை நடத்த மிக முக்கிய நபரான திரு.விஷிகரன் அவர்களுக்கு அனைத்து வீரர்களும் பாராட்டினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்