கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு சேவை

சர்வதேச மனித உரிமை பிரகடன நாளை முன்னிட்டு, சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் அமைப்பின் சார்பில், கஜா புயலின் சீற்றத்தால் சீரழிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட. தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் உள்ள, முதல்சேரி, அணக்காடு, திருச்சிற்றம்பலம், போன்ற பகுதிகளில், 500 க்கும் மேற்பட்டோருக்கு, உணவும், அரிசியும், படுக்கை விரிப்புகளும், மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளும்,
மற்றும் 1000 தென்னை மரக்கன்றுகளும்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலும், நாகப்பட்டினத்தில் வானவன் மகாதேவியிலும், வழங்கப்பட்டன.

இவ்வுதவிகளை பட்டுக்கோட்டையில், திரு.பண்ணவயல் பாஸ்கரன்,அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, சேர்மன் திரு ஜவஹர் பாபு அவர்களால்,மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் தேசிய நிறுவனத்தலைவரும், தற்காப்புக்கலை கிரேண்ட் மாஸ்டருமான, சேவரத்னா,ராஜகுரு.T.ரவிந்திரன்,
அவர்களால் இந்நிவாரண பொருட்கள், மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்களை, மாநில துணைத்தலைவர், கே.சி.தங்கமகன் அவர்களின் பெரு உதவியாலும், மற்றும் இவ்வமைப்பின் முக்கிய நிர்வாகிகளின், உதவிகளாலும் வழங்கப்பட்டன.

உடன், மாநிலச் செயலாளர். ஜி.சரவணன்,மாநில அமைப்புச் செயலாளர், P.செல்வதாஸ், மாநில துணைத் தலைவர், கே.சி.தங்கமகன்,மாநில மகளிர் அணி செயலாளர், திருமதி. கோமதி, மாநில மகளிர் அணி மூத்த ஒருங்கிணைப்பாளர் ராணியம்மாள்.
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,செ.கமல், அமைப்பு செயலாளர்,
P.A. காமாட்சி ஜெயக்குமார், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர், T.A தண்டபாணி, மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்,கோ. மணிவேல். பன்னீர்செல்வம்.V.கணேஷ், செந்தில். சுரேஷ்.மற்றும் இயற்கை ஆர்வலர்,வானவராயன். ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சர்வதேச மக்கள் உரிமை பாதுகாப்பகத்தின் நிறுவனத்தலைவர் ராஜகுரு பேசுகையில்:

இயற்கையின் சீற்றத்தால் நமது மக்களுக்கு ஏற்ப்படும், அழிவுகளை பார்க்கும்போது,
நமது எல்லோருடைய இதயமும், மிகவும் வேதனைக்குள்ளாகிறது.

என்னைப் பொறுத்தவரை, நமது மக்கள் அனைவரும், தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் , ஒற்றுமையுடன் வாழ்ந்து, சாதி,மத,இன, மொழி பேதமின்றி, மக்களை உண்மையாக நேசித்து, ஒருவருக்கொருவர் சேவைகள் செய்துக் கொண்டிருந்தால்,‌ நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவன், இயற்கையால் ஏற்படும் இந்த அழிவுகளிலிருந்து, நம்மை காப்பாற்றி, மக்களுக்கு நிம்மதியை வழங்குவார்.

கஜா புயலினால் ஏற்ப்பட்ட, இந்த இடர்வுகளுக்கு, நமது அரசு தயவுசெய்து துரித நடவடிக்கைகளை, தொடர்ச்சியாக எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையான உதவிகள் செய்து, நல்வாழ்வு அளிக்க வேண்டும் என்று, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்