பெரியகல்லாறில் 35 அடி உயரத்தில் மிக விசாலமான நத்தார் மரம்

கிறிஸ்ம்ஸ் பண்டிகையினை முன்னிட்டு வருடாவருடம் பெரிய கல்லாறு மெதடிஸ்த திருச்சபையினால் நத்தார் மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படுவது வழக்கமாகும்.

அந்தவகையில் இவ் வருடமும் பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மிக விசாலமான நத்தார் மரம் (15.12.2018) அன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நத்தார் மரம் பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபை போதகர் Rev. ஞானரூபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்