இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டை பார்த்து ஒரு கட்சி சார்ந்து செயற்படுவதாகக் கூச்சல் இடுகின்றார்கள். ஆனால் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம்.

அதேபோன்று, நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்போம். சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளை சீரமைத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் விவகாரம் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வேதச சமூகமும் எங்களுடன் நிற்கின்றது” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்