சுவிஸில் நடைபெற்ற நடனத்தில் அகிலன் அபிஷா சாதனை!

சுவிற்சர்லாந்தில் பலநாடுகள் பங்குபற்றிய இசைத்துள்ளல் நடன நிகழ்வில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த செல்வி அகிலன் அபிஷா இரண்டாம் இடத்தைப் பெற்று பெற்றோருக்கும் தாய்நாட்டுக்கும் பெருமைசேர்த்துள்ளார்.

கனடா K2B நடன கல்லூரியில் நடனம் பயின்று வரும் செல்வி அபிஷா அவர்கள் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலனின் அன்பு மகள் ஆவார். ”இசைத்துள்ளல்” நிகழ்வில் பங்குபற்றி, கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் மிகவும் திறமையாக நடனமாடி சாதனையைப் படைத்துள்ளார். இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் (மாஸ்டர்) அவர்களிடமிருந்து சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நடனம் பயிற்றுவித்து குறித்த சாதனைக்கு துணை புரிந்த K2B நடன கல்லூரி ஆசிரியர்களான பாஷா,கருண் ,குமரன் ஆகிய நடன ஆசான்களுக்கு அகிலன் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்து கொள்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்