பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடமையேற்பு!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஒருவரும் இரண்டு பிரதியமைச்சர்களும் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சரான சுஜீவ சேனசிங்க இன்று தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுதவிர, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதியமைச்சராக அண்மையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்ட எட்வட் குணசேகர இன்று தமது பொறுப்புக்களை கையேற்றார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது அமைச்சில் வைத்து அவர் இந்த பொறுப்புக்களை கையேற்றார்.

இதேவேளை, கமநல, கிராமிய பொருளாதார கால்நடைவள அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சராக அண்மையில் சத்திய பிரமாணம் செய்து கொண்ட பீ.ஹெரிசன் கிராமிய பொருளாதார அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்