சுமந்திரன்மீது பொய் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாணமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல் வாதிகளால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் இவர் உட்பட கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது. இது தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமலாக்குவோம் என்று மஹிந்த தரப்பால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்களிடம் தமிழ் சி.என்.என். இணைய ஆசிரியபீடம் வினவியபோது –

அவ்வாறான இரட்டைக் குடியுரிமை தனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

சுமந்திரனின் அதிரடி நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர், அவர்மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக சுமந்திரன் காணப்படுகின்றார். இதேநேரத்தில், அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த மஹிந்த அணியினர், இவ்வாறான பொய்யான பிரசாரங்களை சுமந்திரன் மீது மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்