பிலிப்பைன்ஸில் ஆழிப்பேரலை எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது!

பிலிப்பைன்ஸின் தென் கடற்பிராந்திய தீவான மின்டானாவோவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து அங்கு விடுக்கப்பட்டிருந்த அபாயகரமான ஆழிப்பேரலை அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை சில மணித்தியாலங்களின் பின்னர் மீளப்பெறப்பட்டது.

முன்னதாக 7.2 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் 6.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இதன்போது, அபாயகரமான ஆழிப்பேரலைகள் ஏற்படலாம் என்று பசுபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அபாயகரமான நிலைமை இல்லை என்றும் எச்சரிக்கை மீளப்பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதங்களோ, பாரிய உடமை சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் ஜெனரல் சன்டோஸ் நகரத்திலிருந்து சுமார் 193 கிலோமீற்றர் (120 மைல்கள்) கிழக்காகவும், 60 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்