மும்பையில் மீண்டும் தீ விபத்து

மும்பை, கமலா மில்ஸ் பகுதியில் கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இத்தீயை அணைப்பதற்கு 5 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், உயிர்ச்சேதம் ஏற்பட்டமை தொடர்பில் எந்ததொரு தகவலையும் இந்திய ஊடகம் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை மும்பை, சேம்பர் பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்