தாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை மீட்டவர்களுக்கு பிரித்தானியா கௌரவிப்பு!

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை போராடி மீட்டவர்களுக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பிரித்தானிய மகாராணியினால் வெளியிடப்பட்டுள்ள கௌரவிப்பு பட்டியலில் இவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட ரிச்சர்ட் ஸ்டாண்டன் மற்றும் ஜான் வால்டன் ஆகிய குழுக்களை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் வீர பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.

ஒன்பது நாள் போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்ததை தொடர்ந்து மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்