பங்களாதேஷ் பொதுத்தேர்தல் – பிரதமர் வாக்களித்தார்!

பங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் ஷேக் ஹசினா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

பங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் ஷேக் ஹசினா இன்று காலை டாக்காவிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவுசெய்துள்ளார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பங்களாதேஷ் தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா குற்றம் சுமத்தியிருந்தார்.

இதன்காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்