வட மாநிலங்களில் கடுங்குளிர்: ரயில் சேவை தாமதம்

வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருவதால் டெல்லியில் இருந்து புறப்படும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுள்ளன.

அதேபோன்று டெல்லி வரும் ரயில் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களான உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பனிமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவுகின்றது.

இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொள்ள முடியாத இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அந்தவகையில் மொராதாபாத்திலுள்ள மக்கள், தீமூட்டி தங்களது குளிரை போக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்