பங்களாதேஷ் பொதுத்தேர்தல் – வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்!

பங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

10.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 40,183 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்