உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி வலி.வடக்கு பிரதேசசபை நடத்தியது!

உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேசசபை சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இடையில் ஊழியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தியது.

வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் யாழ்.மகாஜனக் கல்லூரியில் நடத்தப்பட்ட இறுதிச் சுற்றுப்போட்டியில் வலி.வடக்கு பிரதேசசபையும் நல்லூர் பிரதேசசபையும் மோதிக்கொண்டன. இறுதியில் வலி.வடக்கு பிரதேசசபை முதலாமிடமாக வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற வலி.வடக்கு பிரதேசசபைக்குரிய வெற்றிக் கேடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேகாதிராசா பிரதமவிருந்தினராகக் கலந்து வழங்கிவைத்தார்.

இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேசசபைக்குரிய வெற்றிக்கேடயத்தை சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட வலி.வடக்கு பிரதேச செயலர் வழங்கிவைத்தார். வீரர்களுக்கான பதக்கங்களை வலி.வடக்கு பிரதேசசபை எபதவிசாளர் இராசேந்திரம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் தியாகச்சந்திரமூர்த்தி, வலி.வடக்கு பிரதேசசபை செயலாளர் பகீரதன், மகாஜனாக்கல்லூரி பிரதி அதிகர் வசந்தரூபன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்