இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் நேரடியாக தகுதி பெறும் வாய்பை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இழந்துள்ளன.

தெரிவு செய்யும் முறைமைகளுக்கமைய போட்டியை நடாத்தும் அவுஸ்திரேலியா அணி மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு இருபது தரப்படுத்தல் பட்டியலில் அங்கம் வகிக்கும் முதல் 9 அணிகள் தகுதி பெறும்.

இதில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் முதல் சுற்றில் போட்டியிடாது நேரடியாக போட்டிகளில் பங்கேற்க முடியும்.

எஞ்சிய இரண்டு அணிகளும் மேலும் 6 அணிகளுடன் தகுதிகான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு இருபது தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி 9வது இடத்தையும், பங்களாதேஷ் அணி 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்