பிணைமுறி மோசடி குறித்த தடயவியல் பரிசோதனை இவ்வாண்டுக்குள் நிறைவு: மத்திய வங்கி

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்படும் தடயவியல் பரிசோதனையை இந்த ஆண்டுக்குள் நிறைவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11 மில்லியன் ரூபாயை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள தீர்மானித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே பிணைமுறி மோசடி குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் நேற்று நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன அலோசியஸ் இதுவரை கைது செய்யப்படாமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்