புத்தாண்டு ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்!

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்ற புத்தாண்டின் முதல் ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு டூனா மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுக்கிஜி மீன் சந்தைக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள புதிய டொயோசு மீன் சந்தையில், இன்று(சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற புத்தாண்டின் முதல்  ஏலத்தில் குறித்த மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அரிய வகையான 278 கிலோகிராம் எடையைக் கொண்ட குறித்த மீன் ஜப்பானின் வடக்கு கரையோரத்தில் பிடிக்கப்பட்டிருந்தது.

மீனை கொள்ளவு செய்துள்ள சுஷி உணவு வர்த்தகராக கியோஷி கிமுரா இது குறித்து கூறும் போது, “தரமான மீனைத் தாம் வாங்கியதாகவும் எதிர்பார்த்ததை விட அதிக விலையில் மீனை வாங்கியதாகவும்“ அவர் கூறியுள்ளார்.

கடந்த 1935ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பிரபல சுக்கிஜி மீன் சந்தை கடந்த ஒக்டோபர் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆண்டுதோறும் நடைபெறும் மீன் ஏலத்தில் தரமான மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாவது வழமையான விடயம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்