தாய்லாந்து பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்!

தாய்லாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலொங்கோர்னின் (Maha Vajiralongkorn) முடிசூட்டுச் சடங்கு, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த முக்கிய நிகழ்வைத் தேர்தல் பாதிக்காமல் இருப்பதற்குத், தேர்தலை ஒத்திவைக்குமாறு துணைப் பிரதமர் விசானு கிரியங்கார்ம் (Wissanu Kreangarm) பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தாய்லாந்து பொதுத்தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய திகதியைக் குறிப்பது, தேர்தல் ஆணையகத்தின் பொறுப்பு என துணைப் பிரதமர் விசானு கிரியங்கார்ம் கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறவுள்ள முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்