முப்பது வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு நேர்ந்துள்ள கதி

அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 30 வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் பொலே-வொன் முறையில் துடுப்பாடுகிறது.

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான 4வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் நேற்று நிறைவு பெற்றது.

இந்த போட்டியில் முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 322 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணியை பொலே-வொன் முறையில் 2 ஆம் இன்னிங்ஸில் துடுப்பாட இந்திய அணி அழைத்தது.

இதன்படி இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது பொலே-வொன் முறையில் துடுப்பாடிவரும் அவுஸ்திரேலியா அணி விக்கட் இழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றிருந்தது.

கடந்த 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய அணி பொலோ-வொன் பெற்று துடுப்பாடி தோல்வியை தழுவியிருந்தது.

அதன் பின்னர் உள்நாட்டில் நடந்த எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி பொலோ-வொன் பெறாது விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்