குவேந்திராவின் அதிரடி ஆட்டம் ! வருடத்தின் முதல் வெற்றியை ருசித்தது ஜொலிகிங்ஸ்…

(தனுஜன் ஜெயராஜ் )

காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ப.சஞ்ஜீவன் அவர்களின் அம்மம்மாவின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (06) காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் மோதியிருந்தனர்.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்று ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் 18 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றனர்.

ஜொலிகிங்ஸ் அணி சார்பாக துடுப்பாடத்தின் போது குவேந்திரா ஒரு 06 ஒட்டம் 09 நான்கு ஒட்டம் உள்ளங்கலாக 34 பந்துகளை எதிர்கொண்டு 53ஓட்டங்களை குவித்தார்.குகசாந்த் 36 பந்துகளை எதிர்கொண்டு 36 ஓட்டங்களை குவித்தார்.

133 என்கின்ற ஓட்டங்கள் என்கின்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய காரைதீவு விவேகானந்தா அணியினர் 109 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 23 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இவ் வெற்றியின் மூலம் காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் வருடத்தின் வெற்றி பயணத்தை காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினருடன் ஆரம்பித்துள்ளது.

பழமை வாய்ந்த விவேகானந்தா விளையாட்டு கழகத்தை கோற்கடித்த ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனுக்கான விருது குபேந்திரா தனதாக்கினார்.இந்த போட்டியின் சிறந்த விக்கெட் காப்பாளராக சோபி தெரிவானார்.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் முத்துலிங்கம் ரமணிதரன் அவர்களும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் சார்பில் அதன் கழக தலைவர் வினோதராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்